Ads Area

கேலி கிண்டலுக்கும் கோபத்திற்கும் ஆளாகியுள்ள இலங்கைப் பாதுகாப்புத் துறையின் அறிக்கைகள்.

மக்கள் நண்பன் அன்சார் - சம்மாந்துறை.

அமெரிக்கன் முஸ்லீம் எழுத்தாளர் அமாரா மாஜீத் என்ற பெண் எழுத்தாளர் ஒருவரை குற்றவாளியாக அறிவித்த இலங்கை ஊடகத்துறை அப்துல் காதர் பாத்திமா காதியா என்று அவரது பெயரை குறிப்பிட்டு இவரை கைது உதவுமாறு அறிவித்துள்ளது.

உலகில் புலனாய்வுத்துறையில் மிகப்பெரிய அனுபவம் உள்ளவர்கள் என்றும் உலகில் மிகப்பெரிய பயங்கரவாத இயக்கத்தை அடக்கியவர்கள் என்ற பெயரையும் உலகத்தில் அனுபவமுள்ள ஒரு இராணுவ படை என்றும் பெயர் பெற்ற இலங்கை இராணுவம் மற்றும் காவல் துறை புலனாய்வுத் துறை ஆகியோர் சேர்ந்து வெளியிடும் அறிக்கை தான் புலனாய்வு அறிக்கை, ஆனால் அந்த அறிக்கை பொறுப்பற்ற விதத்தில் வெளியிடுவார்கள் என்றால் அது மிகப்பெரிய விபரீதங்களை ஏற்படுத்தும்.

குற்றமற்றவர்களை குற்றவாளிகளாக அறிவிப்பதன் மூலம் குறிப்பிட்ட அந்த நபர் மிகப்பெரிய மன உளைச்சலுக்கு ஆளாகுவார் அத்தோடு சமூகத்தில் அவர் தீவிரவாத கண்னோட்டம் கொண்டுதான் பார்க்கப்படுவார்.

அமெரிக்காவில் இருக்கின்ற ஒரு பெணின் உருவபடத்தை வெளியிட்டு அவர்தான் அப்துல் காதர் பாத்திமா என்று அறிவித்து அவரை தீவிரவாத பட்டியலில் இணைத்து  கைது செய்ய உதவுமாறு  வேண்டுவது எவ்வளவு பெரிய அபத்தம்.

இன்று வெளியான இச் செய்தியானது இலங்கை ஊடகங்களில் மாத்திரமன்றி வெளிநாட்டு ஊடகங்களிலும் காட்டுத்தீ போல் பரவி ஒரு பெண் அதுவும் அமெரிக்காவில் வசிக்கும் ஒரு இலங்கைப் பெண் மீது வீண் தீவிரவாதப் பழி சுமத்தப்பட்டுள்ளது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும்.

இலங்கையில் இடம்பெற்ற இப் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக இந்திய உளவுத்துறை முன்னமே இலங்கைக்கு அறிவித்தும் அது தொடர்பாக எந்த வித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் இலங்கை அரசாங்கம் எடுத்திருக்கவில்லை, ஜனாதிபதியைக் கேட்டால் எனக்கு அறிவிக்கப்படவில்லை என்கிறார், பாதுகாப்பு அமைச்சரைக் கேட்டால் நாங்கள் சுதாகரித்துக் கொள்ளவில்லை தவறுதான் என்கிறார்.


இதே போன்ற பொறுப்பற்ற தனத்தால்தான் தற்போது  ஒரு அப்பாவி முஸ்லிம் பெண்னை தீவிரவாதியாக காட்டியுள்ளார்கள்.

இக் கொடிய பயங்கரவாத தாக்குதலில் இறந்ததவர்களின் என்னிக்கையை கூட இவர்களால் உறுதிப்படுத்த முடியவில்லை இறந்தவர்களின் எண்ணிக்கையை மாற்றி மாற்றி தெரிவிக்கின்றார்கள்.

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் இப் பொறுப்பற்றதனம்  அரசாங்கத்தின் மீது மக்கள் காரசாரமான கண்டனங்களை முன்வைக்கும்படி செய்துள்ளது.

இன்றைய அசாதாரண சூழ்நிலையில் ஒரு இனத்தின் தனிநபரைப் பற்றிய தவறான கண்ணோட்டங்கள் அந்த தனிநபரை மாத்திரம் பாதிக்காது மாறாக அந்த ஒட்டுமொத்த சமூகத்தையுமே பாதிக்கும் என்பதை மனதில் இருத்தி இனி வரும் காலங்களில் இலங்கை பாதுகாப்புத் துறை பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe