Ads Area

நாடெங்கும் சுற்றிவளைப்புகள், தேடுதல்கள், கைதுகள்.

நாடளாவிய ரீதியில் நேற்று இடம்பெற்ற விசேட சுற்றிவளைப்புக்களின் போது பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அளுத்கம தர்கா நகரில் ஆறு பேரும், பேருவளை கங்காவங்கொட பகுதியில் 5 பேரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர், காவல்துறை அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்தார்.

     
இதனுடன் கட்டான கட்டுவாபிட்டிய பகுதியில் ஆறு பேர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, புலனாய்வு அதிகாரிகள், விசேட அதிரடிப்படையினர் மற்றும் வரக்காபொல காவல்துறை அதிகாரிகளும் இணைந்து, கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய அங்குருவெல்ல பகுதியில் வீடொன்று சோதனையிடப்பட்ட நிலையில், அங்கிருந்து நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அங்கிருந்து சந்தேகத்திற்கிடமான உந்துருளியொன்றும், தொலை தொடர்பு உபகரணங்கள் நான்கும் கைப்பற்றப்பட்டுள்ளன.

வரகாபொல பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான வேன் ஒன்றுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது. சந்தேகநபர்களுடன் சேர்த்து SG PH - 3779 என்ற வேன் வரகாபொல பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. அதேநேரம் இவர்களுடன் தொடர்பு வைத்திருந்த மேலும் ஒரு சந்தேகநபர் ஹெம்மாதகம ஹெம்மாதகம பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe