Ads Area

பயங்கரவாத தாக்குதலில் வௌிநாட்டு சிறுவர்கள் உட்பட 45 திற்கும் அதிகமான சிறுவர்கள் உயிரிழப்பு.

கடந்த ஞாயிற்றுக் கிழமை நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களில் சுமார் 45 இற்கும் அதிகமான சிறுவர்கள் உயிரிழந்திருப்பதாக யுனிசெப் அமைப்பு கூறியுள்ளது. 

அவர்களில் வௌிநாட்டு சிறுவர்களும் உள்ளடங்குவதாக அந்த அமைப்பு கூறியுள்ளது. 

இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலை வன்மையாக கண்டித்து யுனிசெப் அமைப்பு வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது. 

தாக்குதலுக்கு இலக்கான மேலும் பல சிறுவர்கள் காயங்களுடன் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும், சில சிறுவர்கள் பெற்றோரை இழந்திருப்பதாகவும் யுனிசெப் அமைப்பு கூறியுள்ளது.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe