நாட்டில் இடம்பெறும் திடீர் சோதனை நடவடிக்கைகளால் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை.
கடந்த ஞாயிற்றுக் கிழமை நாட்டில் பல பகுதிகளில் இடம் பெற்ற மனித நேயமற்ற குண்டுத் தாக்குதல் காரணமாக அசாதாரண சூழ்நிலையால் அவதியுறும் இலங்கையில் தற்போது நாடளாவிய ரீதியில் வீதித் தடைகளை ஏற்படுத்தி வாகனங்கள் மற்றும் நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்கள்.
இந்த சோதனை நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு பொலிஸார் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.