Ads Area

சம்மாந்துறைப் பிரதேச குறைபாடுகளை கண்டறிந்து முன்னேற்றுவது சம்பந்தமான கலந்துரையாடல்.

குறுகிய கால எல்லைக்குள் எமது பிரதேசங்களின் குறைபாடுகளை கண்டறிந்து துரிதமாக முன்னெடுத்து செல்ல தயாராக இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர். S.M.M இஸ்மாயில் தெரிவிப்பு.

நேற்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மக்கள் பணிமனையில் இடம்பெற்ற உயர் அதிகாரிகளுடலான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த 24.03.2019 ம் திகதி இடம்பெற்ற நிகழ்வின் அடுத்த கட்ட சந்திப்பான நேற்று சம்மாந்துறை பிரதேசத்தின் முக்கிய இடங்களின் முக்கிய அதிகார்கள் வருகை தந்தனர். சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை வைத்திய அதிகாரி இஸ்ஸடீன் தலைமையிலான அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் , சம்மாந்துறை முஸ்லிம் மஹாவித்தியாலய அதிபர் இஸ்மாயில் தலைமையிலான குழுவினர்கள், சம்மாந்துறை தொழில்நுட்ப கல்லூரி அதிபர் தலைமையிலான குழுவினர்கள் மற்றும் சம்மாந்துறை சின்னப்பள்ளிவாசல் நிர்வாகிகள் போன்ற குழுவினர்களை சந்தித்து அவர்களுடைய நிறுவனங்களுக்கு நிதி ஒதுக்கீடுகளை வழங்கி முன்னேற்றம் செய்யும் நோக்கில் நேற்று நடைபெற்ற சந்திப்பில் செயற்திட்ட அறிக்கைகள் சமர்பிப்பது தொடர்பாக ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது. இதற்காக காமில் அவர்கள் நியமிக்கப்பட்டதுடன் அடுத்த வாரங்களுக்குள் குறித்த நிறுவனங்களின் செயற்திட்ட அறிக்கைகளும் சமர்பிக்க வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களினால் பேசப்பட்டது.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe