Ads Area

நாசம் செய்யப்பட்ட மினுவாங்கொட பெளஸ் ஹோட்டல் பற்றிய ஒரு சிங்கள சகோதரரின் ஆழமான பதிவு.

Menaka Wasantha எனும் சிங்கள சகோதரரின் முகநுாலில் இருந்து கொப்பி செய்யப்பட்டு பதிவேற்றப்பட்டுள்ள பதிவே இதுவாகும்.

இது மினுவங்கொட 'பெளஸ் ஹோட்டல் '. இங்கு வேலை செய்த அனைவருமே சிங்கள மக்கள். விமான நிலையத்துக்குப் போகின்ற/வருகின்ற வாகனங்கள் இவ்விடத்தில் நிறுத்தி , எதையாவது ருசித்து விட்டுப் போவது வழக்கம். எப்போதும் சனக் கூட்டம் நிரம்பி வழியும் இடம். இது பலரது கண்களுக்கு உறுத்தலாயும் அமையும்.

12 வருடங்களாக மினுவங்கொடவில் புழங்கித் திரியும் நான் கூட இந்த ஹோட்டலில் தேனீர் அருந்தியிருக்கிறேன். ஒரு முறை தேனீர் அருந்தும்போது அங்கு பணிபுரியும் சிங்களப் பெண்மணியோடு கதைத்துக் கொண்டது ஞாபகம் வருகிறது. "அநியாயம் சொல்லக் கூடாது மகனே..இந்த முதலாளி எங்களுக்கு மாதம் 60 ஆயிரம் அளவில் சம்பளம் தருகிறார். அது தவிர, எங்களது பெரு நாள்/புது வருடத்துக்கு 'போனஸ்' கூடத் தருகிறார். இதையே எம்மவர் யாராவது எமக்குச் செய்வார்களா?" என்று பூரித்துக் கொண்டார்.

வெளியேறும் போது , வாசலில் நின்ற காவலாளியிடமும் பேச்சைக் கொடுத்தேன். "நல்ல சம்பளம் கிடைக்கிறது. ஒரு அவசரத்துக்கு உதவி கேட்டால் பணமும் கொடுக்கிறார்கள். சொல்லப் போனால் எங்கள் மக்களைவிட இவர்கள் சிறந்தவர்கள். நானென்றால் இந்த இடத்தை விட்டும் ஒரு நாளும் விலகப் போவதில்லை." என வியந்து கொண்டார்.

இப்போதென்ன, பெளஸ் ஹோட்டலுக்குப் பதிலாக, அவ்விடத்தில் - சிதைக்கப்பட்ட குப்பை மேடொன்று கிடக்கிறது. பிரதேச அரசியல்வாதிகளும் மனிதாபிமானமற்ற ஒரு கும்பலும் சேர்ந்து , நூற்றுக் கணக்கான சிங்களச் சகோதரர்களது அன்றாடப் பிழைப்பில் மண்ணை அள்ளிப் போட்டிருக்கிறார்கள்!

இதற்கிடையில் இந்தக் கலகத்தில் , உடைமைகளைக் கொள்ளையடித்தும் இருக்கின்றனர்! இந்த இனவாதக் கும்பலைக் கட்டிப் போடுமளவுக்கு அரசுக்கு முதுகெலும்பில்லையென்பதைச் சுடிக் காட்டுவதும் இங்கு பொருத்தமாயிருக்கும்.

මේ ති‍‍යෙන්නේ මිනුවන්ගොඩ ෆවුස් හෝටලේ.. 

ඔය හෝටලේ වැඩ කලේ ඔක්කොම සිංහල මිනිස්සු.. එයාපෝට් එකට යන හැම වාහනයක්ම ඔතන නවත්තලා මොනාහරි සප්පායම් වෙලා යනවා. සෙනඟ උතුරනවා. අනික් මිනිස්සුන්ගේ ඇහේ කටු අනිනවා වගේ. අවුරුදු දොලහක් මිනුවන්ගොඩ හක්කලන් කරපු මමත් ඔය හෝටලෙන් තේ බීලා තියෙනවා. තේ බොන ගමන් කඩේ වැඩ කරන සිංහල ඇන්ටි කෙනෙක් එක්ක දොඩමලු වුනා මතකයි.

"අපරාදෙ කියන්න බෑ පුතේ මුදලාලි අපිට හැටදාහක් විතර පඩි දෙනවා. අපේ අවුරුද්දට බෝනසුත් දෙනවා. අපේ එකෙක් ඔහොම කරයිද?" එලියට පැමිණි මම මුරකරු සමඟද දොඩමලු වුනෙමි.

"හොඳ පඩියක් දෙනවා මහත්තයා. හදිසියට සල්ලිත් දෙනවා. අපේ උන්ට වඩා හොඳයි. මමනම් මේක දාලා යන්නෑ"

දැන් ෆවුස් හෝටලය වෙනුවට එතන ඇත්තේ සුන්බුන් ගොඩකි. මිනුවන්ගොඩ දේශපාලන අධිකාරිය හා හීනටියන වසල රැල එක්ව අපේ සිංහලයන් සිය ගනනකගේ එදා වේල සරිකරගත් රැකියා ගණනාවක්ද නැත්තටම නැති කර තිබේ. මේ ක්‍රියාවළිය අභ්‍යන්තරයේ මංකොල්ලයක්ද සිදුව තිබේ. ජාතිවාදී නරුමයන් බැඳ තැබීමට ආණ්ඩුවට කොන්දක් නැති වීමද පෙන්වා දීම වටී.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe