(எம்.எம்.ஜபீர்)
சம்மாந்துறை பிரதேசத்தின் பாதுகாப்பு தொடர்பாக இராணுவத்தினருக்கும் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்களுக்குமான உயர் மட்ட கலந்துரையாடல் சம்மாந்துறை பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்றது.
சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.முஹம்மட் நௌஷாட் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் அம்பாரை மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த முதலிகே கலந்து கொண்டு பிரதேசத்தின் பாதுகாப்பு தொடர்பாக முன்னெடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து தெளிவுபடுத்தினார்.
இக்கலந்துரையாடலில் சம்மாந்துறை பிரதேச சபையின் உதவி தவிசாளர் வீ.ஜெயச்சந்திரன், பிரதேச சபை உறுப்பினர்கள், இராணுவ உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.