Ads Area

புத்தள பிரதேச செயலகத்தின் நிர்வாகம் இலங்கை சட்ட விதிகளுக்கு அமைவாக நடைபெறுகிறதா?

ஷக்கி செய்ன்.

புத்தள பிரதேச செயலகத்தில் நடைபெறும் அரச நிர்வாகம் இலங்கை சட்ட விதிகளுக்கு அமைவாக நடைபெறுகிறதா? அல்லது காட்டு தர்பார் அரசு நிர்வாகம் நடைபெறுகிறதா?

இலங்கை ஜனநாயக குடியரசின் அரசியல் யாப்பு படி இந்த நாட்டில் வாழுகின்ற அனைவருக்கும் அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மதக் கலாச்சாரங்களையும் ஆடைகளை சுதந்திரமான முறையில் பின்பற்றுவதற்கு சகல உரிமைகளும் உண்டு.

ஆனால் இலங்கை அரசாங்கத்தால் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் விதமாக முகத்தை காட்டி ஹபாயா ஆடை அணிவதற்கு எந்தவிதத் தடையும் இல்லை என்று உத்தியோக பூர்வமான வர்த்தமானி வெளியிடப் பட்டிருந்ததும் புத்தளம் பிரதேச செயலகத்தில் கடமையாற்றுகின்ற முஸ்லிம் அரச ஊழியர்கள் ஹபாயா ஆடை அணியக் கூடாது என்று இலங்கை சட்ட விதிகளை மீறிய வகையில் மதவாதத்தையும் இனவாதத்தை ஏற்படுத்தும் வகையில் சில அரச ஊழியர்களும் அரசு நிர்வாகிகளும் செயற்படுவது எந்த விதத்தில் நியாயம் ஆகும்?

புத்தளம் வாழ் மக்களே எமது ஜனநாயக ரீதியான உரிமையை பாதுகாப்பதற்காக நீங்கள் அவசியம் செய்ய வேண்டியது


01. புத்தள பிரதேச செயலக அரச நிர்வாகிகள் மதவாதத்தை, இனவாதத்தை தூண்டுகின்றன விதத்தில் ஜனநாயக ரீதியான அபாயா ஆடை உரிமையை மறுக்கின்ற விதத்தில் செய்யப்படுகிறார்கள் என்று இவர்களுக்கு எதிராக பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கையெழுத்து வேட்டை ஒன்றை நடத்த வேண்டும்.

02. புத்தள பிரதேச செயலக அதிகாரிகளும் செய்யப்பாடு நாட்டில் மதவாதத்தை, இனவாதத்தை தூண்டுவதற்கு வழிவகுக்கும் என்ற குற்றச்சாட்டை ஜனாதிபதி, பிரதமர், பொது நிர்வாக அமைச்சு, மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தி அதற்கான ஆதாரங்களையும் ஆவணங்களையும் சமர்ப்பித்து சட்டரீதியான நடவடிக்கை எடுத்தல்

03. நாட்டின் சட்ட ரீதியான ஆடை உரிமையை பின்பற்றுவதற்கு தடையாக இவர்கள் காணப்படுகிறார்கள் என்று மனித உரிமை ஆணைக்குழு, ஐக்கிய நாட்டு சபை ,வெளி நாட்டு இஸ்லாமிய நாடுகளுக்கும் ,ஏனைய சர்வதேச சமூகத்திற்கு ,சரியான ஆவணங்களை சமர்ப்பித்து இவர்களின் குற்றச் செயலை தெளிவுபடுத்தி எமது உரிமையை வெல்வதற்கான முயற்சி எடுத்தல்.

04. விஷேடமாக உள்நாட்டு வெளிநாட்டு சர்வதேச ஊடகங்களுக்கு இவர்களின் செயற்பாடுகளை தெளிவுபடுத்தல் ஊடக மாநாடு மூலம்.

05. எமது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சித் தலைவர்களுக்கு மக்கள் ஒரு தெளிவான செய்தியை முன்வைக்கவேண்டும் எங்களது ஜனநாயக ரீதியான ஆடை உரிமையை நீங்கள் பெற்று தந்து அதற்கு எதிராக இருக்கின்ற பத்தள பிரதேச செயலக அதிகாரிகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் அரசின் பங்காளிகளாக நீங்கள் இருக்கக் கூடாது வெறும் வெற்று வீர பேச்சுக்கலை பாராளுமன்றத்தில் பேசுவதாலும் ,கதிரைகளை சூடாக்குவதால் எதையும் நீங்கள் சாதிக்க முடியாவிட்டால் மக்களோடு மக்களாக வீதியில் இறங்கி போராடுவது சர்வதேச சமூகத்துக்கு இவர்களின் உரிமை மீறல் ஜனநாயக ரீதியான காட்டு தர்பார் அடக்குமுறையை தெளிவுபடுத்துவதற்கு நீங்கள் உதவி செய்ய வேண்டும் இல்லாவிட்டால் எதிர்காலத்தில் மக்களால் புறக்கணிக்கப்படுகின்ற அரசியல் வாதிகளாக நீங்கள் மாறுவீர்கள் என்பது சந்தேகத்திற்கு இடமில்லை.

மேலும் புத்தள பிரதேச செயலகத்தில் முஸ்லிம்களின் ஆடை உரிமைக்கு எதிராக செயற்படுகின்ற நபர்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் எதிர்காலத்தில் ஏனைய பிரதேசங்களிலும் இவ்வாறான நடவடிக்கைகள் தொடர் கதையாக சில இனவாத மதவாத சிந்தனையுடையவர்கள் தொடர்வார்கள் இது எமது ஜனநாயக ரீதியான உரிமைகள் ஒடுக்கப்படுவதற்கு முதல் படியாக அமைந்து விடும் ஆகவே அனைவரும் ஒன்றிணைந்து எமது உரிமையை வென்றெடுப்பதற்கு திடசங்கற்பத்துடன் செயற்படுவோம் வாருங்கள் ஒற்றுமையாக.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe