Ads Area

முஸ்லிம்களை கல்லால் அடித்துக் கொல்ல வேண்டுமெனக் கூறிய அஸ்கிரிய பீட தேரருக்கு அமைச்சர் மங்கள கண்டனம்.

முஸ்லிம்களை கல்லால் அடித்துக் கொல்ல வேண்டுமெனக் கூறிய அஸ்கிரிய பீட தேரருக்கு அமைச்சர் மங்கள கண்டனம். 

பௌத்த தர்மங்களையும் உயரிய சிந்தனைகளையும் தீவிரவாதத்தினை நோக்கி திசை திருப்ப முயல்கின்றவர்களுக்கு எதிராக பௌத்தர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று நிதி அமைச்சர் மங்கள சமரவீர கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், மனிதர்களை கல்லால் அடித்து கொல்ல வேண்டுமென எந்தவொரு பௌத்தர்களும் எண்ணமாட்டார்கள் எனவும் அவ்வாறு பிற இனத்தவரைப் பார்த்துச் சொன்ன தேரர் புத்த மதத்தில் உள்ள ஒரு தலிபான் போன்றவராவர் இன்று (புதின்கிழமை) வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் வர்த்தக நிலையங்களை பகிஷ்கரிக்குமாறும் அவர்களின் கடைகளில் உணவுகளை உண்ண வேண்டாமென்றும் அஸ்கிரிய பீடத்தின் மாநாயக்க தேரர் வரக்காகொட ஞானரத்தன தேரர் நேற்று தெரிவித்திருந்தார்.

“முஸ்லிம்கள் சிங்கள மக்களை அழிக்க எடுத்த செயற்பாடுகள் இப்போது பகிரங்கத்துக்கு வந்துள்ளன.எனது மக்கள் கவனமாக இருக்க வேண்டும். மருத்துவர் ஒருவர் லட்சக்கணக்கான எமது குழந்தைகளை இல்லாமலாக்கியுள்ளார்.

இப்படியான சிங்கள இனத்தை அழிக்க நினைக்கும் தேசத்துரோகிகளை கல்லால் அடித்து கொல்ல வேண்டுமென பலர் என்னிடம் கூறினர். அப்படி செய்யுங்கள் என நான் கூற மாட்டேன்.

ஆனால் செய்யப்பட வேண்டியது அது தான். நாட்டையும் மக்களையும் நேசிக்கும் தலைவர்களை மட்டும் மக்கள் நாடாளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும்” என அஸ்கிரிய பீடத்தின் மாநாயக்க தேரர் வரக்காகொட ஞானரத்தன தேரர் நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நிதி அமைச்சர் மங்கள சமரவீர அவர்களின் குறித்த டுவிட்டர் பதிவிற்கு நுாற்றுக்காணக்கான ஆதரவுகள் குவிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Mangala Samaraweera condemning calls by Asigiri Chief Prelate to stone Muslims, says the hateful words by the monk is a ‘Talibanization’ of Buddhism and that no Buddhist can condone a call to stone another human to death.

Publishing a tweet from his official Twitter account this morning, Mangala says now is the time for true Buddhists to unite against the religion from being tainted by violent extremism.

Mangala reminds the Buddhist community that it goes against all Buddhist principles and beliefs to condone a statement to stone another human being to death, even if it emanates from monks.

Below is his tweet:

True Buddhists must unite NOW against the Talibanization of our great philosophy of peace & love of all beings. No Buddhist can condone a statement to stone another human being to death, even if it emanates from the robed orders.


Mangala so far has been the only politician to issue a public rejection and condemnation of the Asgiri thera’s anti-Muslim speech made on Sunday, that blessed violence against Muslims.


Despite availability of video proof of the speech, Warakagoda Sri Gnanarathana still remains immune to being charged with violating the ICCPR Act.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe