கல்முனை வடக்கு உப பிரதேச செயலக உருவாக்கத்தின் போது கல்முனை முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் குறித்து சம்மாந்துறை மக்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டம்; நேற்றிரவு (29) சனிக்கிழமை சம்மாந்துறை பத்ர் ஜீம்ஆப் பள்ளிவாசலில் சம்மாந்துறை மசூறா சபைத் தலைவர் ஏ.ஜப்பார் தலைமையில் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.எம்.மன்சூர், கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயில், கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றகீப், சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபைத் தலைவர் கே.எம்.முஸ்தபா, கல்முனை பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் டாக்டர் எஸ்.எம்.ஏ. அஸீஸ், பிரதேச சபை உறுப்பினர்கள், பள்ளிவாசல் தலைவர்கள், கல்விமான்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் தரமுயர்த்தலினால் கல்முனை முஸ்லிம்களுக்கு ஏற்படப்போகும் பாதிப்புக்கள் குறித்து முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெளிவூட்டினார்.
இதனை அடுத்து சம்மாந்துறை மக்கள் வடக்கு உப பிரதேச செயலக தரமுயர்த்தல் விவகாரத்திற்கு எதிராக கல்முனை முஸ்லிம் மக்களுக்கு தங்களது பேராதரவினை இதன்போது பிரகடணம் செய்தனர்.