Ads Area

எங்கள் பிள்ளைகளின் முகத்தையாவது பார்ப்பதற்கு அனுமதி வழங்குங்கள்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முல்லைத்தீவிலும் ஆர்ப்பாட்டமொன்றினை முன்னெடுத்திருந்தனர். முல்லைத்தீவிலுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் இணைப்பு அலுவலகத்துக்கு முன்னால் குறித்த போராட்டம்  (சனிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டோர், ‘தடுப்பு காவலில் எமது பிள்ளைகள் இருப்பார்களாயின் அவர்களது முகத்தையாவது பார்ப்பதற்கு அனுமதி வழங்குங்கள்’, ‘தடுப்பவர் யாராயினும் தலைகுனிய மாட்டோம். தலைமுறை தாண்டியும் போராடுவோம்’, ‘வட்டுவாகலில் வைத்து இராணுவத்திடம் கையளித்த எமது உறவுகள் எங்கே?’ உள்ளிட்ட வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகள் ஆகியவற்றையும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் ஒளிப்படங்களையும் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் அவர்கள் தெரிவித்துள்ளதாவது, “நாங்கள் இன்றுடன் 846 ஆவது நாளாக போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம். ஆனால் அரசாங்கம் எமது போராட்டத்தை கண்டுகொள்வதாக தெரியவில்லை என்பதுடன் எந்ததொரு சிறந்த நடவடிக்கையையும் இதுவரை முன்னெடுக்கவில்லை.

ஆகையால் சர்வதேசம் தலையிட்டால் மாத்திரமே எமக்கு உரிய தீர்வு கிடைக்கும்” என நம்புவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe