கடந்த ஞாயிற்றுக்கிழமை கண்டியில் பொதுபலசேன அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட பேரணியில் பயன்படுத்தப்பட்ட சர்ச்சைக்குரிய கொடி குறித்து முறைப்பாடுகள் எதுவும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்துறை மற்றும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எம்.டி.இ.சாமிலன் இதனை கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்
கடந்த ஞாயிற்றுக்கிழமை கண்டியில் பொதுபலசேனா அமைப்பு மாபெரும் பேரணி ஒன்றை நடத்தியது. இதில் ஏராளமாக பௌத்த பிக்குகள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
இந்த பேரணியில் கலந்துகொண்டிருந்தவர்கள் திரிபுப்படுத்தப்பட்ட தேசியக் கொடியினை பயன்படுத்தியிருந்தனர். சிலர் பேரணியின் முடிவில் மேடையில் ஏறி குறித்த கொடியினை அசைத்து ஆரவாரம் செய்திருந்தனர்.