அலுகோசு பதவிக்கு இருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை தலைமையகம் செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த இருவருக்கும் 2 வாரங்கள் அடிப்படை பயிற்சி வழங்கப்பட்டுள்ளதுடன், எந்த நேரத்திலும் தூக்கிலுடும் பணியை நிறைவேற்ற அவர்கள் தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருவரும் ஏற்கனவே இரண்டு வார அடிப்படை பயிற்சிக்கு உட்பட்டுள்ளதுடன் ,மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட இருவரின் அடையாளத்தை எந்த ஊடகத்திற்கும் வெளிப்படுத்தாதிருக்க சிறைச்சாலை அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.