மட்டக்களப்பு - மண்முனை மேற்கில் உள்ள கிராமங்களில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றெடுத்த தாய்மார்களுக்கு உதவி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
புலம்பெயர் ஐரோப்பா வாழ் தமிழ் மக்கள் ஆதரவில் ஆறு குடும்பங்களுக்கு தலா 10,000 ரூபா நேற்று வழங்கப்பட்டுள்ளது. கிராம அபிவிருத்தி எனும் தலைப்பில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவால் மூடப்படும் நிலையில் உள்ள பாடசாலையின் நிலைமை கருதி பிரதேச தமிழ் மக்களின் பிறப்பு வீதத்தை அதிகரிக்கும் நோக்கில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வைத்தியர் அருளம்பலம் பிரகாஷ், விசேட அதிதிகளாக க.ஹரிகரராஜ், பிரதிக்கல்விப் பணிப்பாளர் வலயக் கல்விப் பணிமனை மட்டக்களப்பு மேற்கு வலயம் செ.மகேந்திரகுமார் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.