முஹம்மட் றிஸ்வான் (ஆசிரியர்)
ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய முன்னெடுக்கப்படும் தேசிய போதைப் பொருள் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மஹா வித்தியாலயத்தில் போதை ஒழிப்பு வேலைத்திட்டம் அதிபர் திரு.இஸ்மாயில் தலைமையில் இன்று இடம் பெற்றது.

பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்ட இந் நிகழ்வில் போதைப் பொருள் பாவனையின் தீங்குகள் பற்றிய விழிப்புணர்வு அறிவுரைகள் பாடசாலை அதிபர்-ஆசிரியர்களால் மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
“எமது பாடசாலை போதைப் பொருள் பாவனையற்ற புத்திசாலி பிள்ளைகளைக் கொண்ட பாடசாலையாகும்” போன்ற பதாதைகள் இந் நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்டது.