உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பொறுப்புக்கூற வேண்டிய அனைத்து அரசியல்வாதிகளையும் கைது செய்யவேண்டும் என மாகல்கந்தே சுதத்த தேரர் தெரிவித்துள்ளார்.
அந்த பொறுப்பை இரு அதிகாரிகள் மீது சுமத்திவிட்டு அதிலிருந்து அரசியல்வாதிகளை தப்பிக்க இடமளிக்க கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அமெரிக்காவுடன் செய்துகொள்ளவுள்ள ஒப்பந்தத்தினால் நாட்டிற்கு ஏற்படக்கூடிய நிலமைக்கு தற்போதைய ஆட்சியாளர்கள் பொறுப்புக்கூற வேண்டும் என பொங்கமுவே நாலக தேரர் தெரிவித்துள்ளார்.