(காரைதீவு நிருபர் சகா)
திருக்கோவில் பிரதேச செயலாளராகவிருந்த சிவஞானம் ஜெகராஜன் மீண்டும் காரைதீவு பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சமகாலத்தில் திருக்கோவில் பிரதேச செயலாளராகவிருந்த ஜெகராஜன் காரைதீவுப் பிரதேச பதில் பிரதேச செயலாளராக கடமையாற்றி வந்தார்.
இவர் ஏலவே காரைதீவின் முதலாவது பிரதேசசெயலாளர் எஸ்.இராமகிருஸ்ணனுக்கு அடுத்ததாக ஜெகராஜன் பிரதேசசெயலாளராகவிருந்தார்.பின்னர் அவர் திருக்கோவிலுக்கு இடமாற்றம்பெற்றுச்சென்றிருந்தார்.
நேற்று (1) திங்கட்கிழமை திருக்கோவிலில் அவருக்கு பிரியாவிடை நிகழ்வு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. ஆளுயரமாலைசூட்டி பொன்னாடைபோhத்துக்கௌரவிக்கப்பட்டார். உதவிபிரதேசசெயலாளர் கந்தவனம் சதீஸ் தலைமையில் இந்நிகழ்வ நடைபெற்றது.