ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய முன்னெடுக்கப்படும் தேசிய போதைப் பொருள் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு சம்மாந்துறை சம்மாந்துறை மஜீட்புர வித்தியாலயத்தில் போதை ஒழிப்பு வேலைத்திட்டம் அதிபர் திரு.முஸம்மில் அவர்கள் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.
பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்ட இந் நிகழ்வில் மாணவர்கள் போதைப் பொருள் விழிப்புணர்வு பதாதைகளை ஏந்தியவாறு போதைப் பொருள் ஒழிப்புக் கோஷங்களை எழும்பினர்.