மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 16 தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜே.வி.பி.க்கு அதரவளிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளன.
அதற்கமைய கட்சியின் வேட்பாளரும் கட்சியின் தலைவருமான அநுரகுமார திசாநாயக்கவுக்கு ஆதரவு தெரிவிக்க தீர்மானித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட விவசாய சங்கத் தலைவர் நடேசன் சுந்தரேசன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தம் கருத்து வெளியிட்டுள்ள அவர், “கடந்த 71 வருடங்களாக எம்மை ஆட்சி செய்த நீலமும் பச்சையும் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. ஆனால் அதற்கு மாறாக இந்த நாட்டை அடகுவைத்து அழித்துவிட்டார்கள்.
எனவே, மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள விவசாய சங்கம், பொறியியலாளர் சங்கம், மண்அகழ்வு உத்திர பத்திரம் உள்ள சங்கம், கிழக்கிலங்கை இந்து வாலிப முன்னணி, உட்பட 16 தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து சிறுபான்மை இனத்திற்கு உதவி செய்யக்கூடிய ஜே.வி.பி.யின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்கவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக தீர்மானித்துள்ளோம் .
கிழக்கு வாழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து தொழிலாளர் மேம்படுத்தும் எமது மக்கள் சக்திக்கு அணிதிரளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்” என மேலும் தெரித்தார்.