Ads Area

பெற்ற பிள்ளை இருந்தும் 19 ஆண்டுகளாக கழிப்பறையில் வசிக்கும் தாயின் பரிதாபநிலை!

தமிழகத்தின் சங்கத்தமிழ் வளர்த்த மதுரையில் உள்ள பொதுக் கழிப்பறை ஒன்றில் கிட்டதட்ட 20 ஆண்டுகளாக 65 வயது மூதாட்டி ஒருவர் வாழ்ந்து வருகின்றார்.

மதுரை ராம்நாடு பகுதியில் உள்ள பொதுக் கழிப்பறை ஒன்றிலேயே குறித்த , மூதாட்டி வாழ்க்கை நடத்தி வருகிறார். குறித்த பொதுக் கழிப்பறையை சுத்தம் செய்வதன் மூலம் அவருக்கு தினமும் ரூ.70 முதல் 80 வரை கிடைப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன் முதியோர் உதவித் தொகைக்காக அவர் பதிவு செய்துள்ளபோதும், எனினும் இதுவரை எந்த உதவியும் கிடைக்கவில்லை என்றும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பல அதிகாரிகளிடம் இதுதொடர்பில் முறையிட்டும், எதுவும் பயனளிக்கவில்லை எனவும் குறித்த மூதாட்டி தெரிவித்துள்ளார்.

வேறு எந்த வருமான ஆதாரமும் இல்லாத காரணத்தினால், இப்படி ஒரு அசாதாரண வாழ்க்கை முறைக்கு தள்ளப்பட்டதாகவும், தனக்கு ஒரு மகள் மட்டுமே இருப்பதாகவும் , எனினும் அவரும் தன்னை கைவிட்டதாகவும் குறித்த மூதாட்டி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe