Ads Area

முஸ்லிம் விவாக, விவாகரத்துச் தனியார் சட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட முக்கிய மாற்றங்களாக சொல்லப்படுபவைகள்.

1. திருமண வயது ஆண் பெண் இருபாலாருக்கும் 18 வயதிற்குக் குறையாமல் இருத்தல். அதே நேரம் 16-18 வயதுடையவர் களுக்கு காதியின் அனுமதியைப் பெற்று (சந்தர்ப்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு) திருமணம் நடைபெறலாம்.

2. தற்போது அமுலிலுள்ள வலியோடு சேர்த்து மணமகளின் அனுமதியும் பெறப்படல் வேண்டும்.

3. நிகாஹ் நடைபெறும் அதே நேரத்தில் விவாகப் பதிவும் (Registration) இடம்பெறுவதும் கட்டாயமாகும்.

4. இரண்டாம், மூன்றாம், நான்காம் திருமணம் செய்யும் போது, முதல் மனைவியின் சம்மதம் பெறப்பட்டு இருப்பது அவசியம்.  அது இல்லாதபோது, முதல் மனைவிக்கு தனது கணவனை "பஸஹ்" முறைப்படி விவகரத்துச் செய்ய உரித்துள்ளதாகக் கருதப்படும்.

5. காதியாக நியமிக்கப்படுபவர் ஒரு சட்டத்தரணியாக இருப்பது அவசியம்.

6. காதி நீதிமன்றம் என்ற பெயருக்கு பதிலாக திருமண மேன் முறையீட்டு சபை ( கொமிஷன்) என பெயர் மாற்றப்பட வேண்டும்.

7. விவாகப்பதிவாளராக ( Registrar of Marriage) ஆக பெண்களை நியமிக்க முடியும்.

8. காதி மேன்முறையீடுகளை விசாரிக்கும் சபைக்கு (Board of Qazi) பெண் அங்கத்தவர்களையும் நியமிக்கலாம்.

Copied from - Seyed Ahamad

Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe