தமிழா ஊடக வலையமைப்பின் ஏற்பாட்டில் சுகாதார சிகிச்சை நிலையத்தில் நிர்மாணிக்கப்பட்ட கழிவறைத் தொகுதியினை பொதுமக்களுக்கு கையளித்தலும் மரக்கன்று நடுதலும்.
சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி எஸ் ஐ.முகம்மட் கபீர் தலைமையில் 2019.08.26 திங்கட்கிழமை செந்நெல் கிராமம் 01 இல் சுகாதார சிகிச்சை நிலையத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.
தமிழா ஊடக வலையமைப்பின் பசுமைப் புரட்சி திட்டம் -2019 கீழ் வித்யாசாகர் கலை மன்றத்தின் போசகர் பன்முக ஆளுமை உயர் திரு வித்யாசாகர் ஐயா அவர்களின் அன்பளிப்பின் மூலம் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரிப் பணிமனையின் சுகாதார சிகிச்சை நிலையத்தில் கழிவறைத் தொகுதி நிர்மாணிக்கப்பட்டடு பொதுமக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நிலைய வளாகத்தில் மரக்கன்றுகள் அதிதிகளால் நட்டப்பட்டன.
புகைப்படங்கள் - பரீட் அல்தாப்.