Ads Area

2022ம் ஆண்டளவில், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தி நாடாக மாறவுள்ள இலங்கை.



2022ம் ஆண்டளவில், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தி நாடாக இலங்கையை மாற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. உலகின் முன்னணி எரிபொருள் நிறுவமான டோட்டல் நிறுவனத்துடன் இணைந்து கனியவளம் தொடர்பிலான உடன்படிக்கை ஒன்றில் இலங்கை அரசாங்கம் கைச்சாத்திட்டுள்ளது.

இந்த உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு பெருந்தெருக்கள் மற்றும் பெற்றோலிய வளத்துறை அமைச்சின் நடைபெற்றது. அமைச்சர் கபீர் ஹாஷிம் மற்றும் டோட்டல் ஈ அன்ட் பீ மற்றும் இக்கியுனோ அசா ஆகிய நிறுவனங்களின் அதிகாரிகள் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.

2022ம் ஆண்டளவில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தி நாடாக இலங்கை திகழுமென்றும் அமைச்சர் இதன் போது குறிப்பிட்டார்.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe