நீங்கள் சாப்பிடும் முட்டையில்" மஞ்சள் கருவிலிருந்தே தெரிந்து கொள்ளலாம் , அது ஆரோக்கியமான கோழியிலிருந்து வந்ததா இல்லை பிராய்லர் கோழியிடமிருந்து வந்ததா என. முட்டை நல்லது என சிறு வயதிலிருந்தே நமக்கு சொல்லிக் கொடுத்தாலும் அதிலேயும் கலப்படம், ஹார்மோன் ஊசி என மண்ணை அள்ளிப் போட்டுவிட்டனர் இன்றைய வணிகஸ்தர்கள்.
ஆரோக்கியத்தையும் எப்போது வணிகம் செய்ய ஆரம்பித்தனரோ அப்போதிருந்து ஆரம்பித்துவிட்டது நமது ஆரோக்கியத்திற்காக கேடு காலம். சாப்பிடும் அரிசியிலிருந்து குடிக்கும் நீர் வரை எல்லாவற்றிலும் ஆபத்து என்றால் எதைத்தான் பின் சாப்பிடுவது என நமக்கு பலக் கவலைகள் சூழ்கின்றன.
நாட்டுக் கோழி முட்டையின் நன்மைகள்!!
நாட்டுக் கோழி முட்டையை நீங்கள் தினமும் எடுத்துக் கொண்டால் உங்களை நோய்கள் நெருங்காது. குறைவான கலோரியே முட்டையில் உள்ளது. வெள்ளைக் கருவில் 17 மற்றும் மஞ்சள் கருவில் 59 கலோரிகள் இருக்கின்றன நினைவாற்றல் அதிகரிக்கும் : நாட்டுக் கோழி முட்டையை தொடர்ந்து சாப்பிடுவதால் நினைவாற்றல் அதிகரிக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதிலுள்ள அட்டகாசமான மினரல் சத்துக்களே காரணம். கால்சியம், சல்ஃபர், மெக்னீசியம், ஜிங்க் போன்ற மிக முக்கியமான 11 மினரல்கள் இருக்கின்றன.
கர்ப்பிணிகளுக்கு :
கர்ப்பிணிகள் தினமும் ஒரு நாட்டுக் கோழி முட்டை சாப்பிடுவதால் குழந்தை நல்ல அறிவோடு பிறக்கும் . அதோடு குழந்தைக்கு பின்னாளில் வரும் எந்த எலும்புப் பிரச்சனைகள் உடலில் உண்டாகாது.
கேடராக்ட் :
எலும்பு வளர்ச்சி :
உடலுக்கு தேவையான எலும்பு வளர்ச்சிக்கு அத்யாவசியமான உணவுகளில் முட்டையும் ஒன்று. குறிப்பாக குழந்தைகளுக்கு தினமும் ஒரு முட்டை கொடுப்பதை எந்த காரணத்திலும் மறக்காதீர்கள். பின்னாளில் எலும்பு தேய்மானம் வராமல் தடுக்கும். ரத்த சோகை : ரத்த சோகை இருப்பவர்கள் அவசியம் முட்டையை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. விட்டமின் ஈ, இரும்புச் சத்து, ஜிங்க் போன்ரவை இருப்பதால் ரத்த சோகையை சரிப்படுத்த உதவுகிறது.
யாரெல்லாம் சாப்பிடக் கூடாது ?
இதய நோய் இருப்பவர்கள், கொழுப்பு அதிகம் இருப்பவர்கள் மஞ்சள் கருவை தவிர்த்துவிட்டு வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிடலாம். வயதானவர்களுக்கு ஜீரண சக்தி குறைவாக இருப்பதால் அவர்கள் முட்டையை தவிர்த்தல் நல்லது.
வறுத்து சாப்பிடலாமா?
முட்டையை அதிக நேரம் வேகவோ அல்லது வறுக்க வைக்கவோ கூடாது. சிலர் வாணிலியில் வறுக்கும்போது அது ஒரு வாசனையை தரும். இதில் அதன் சத்துக்களை இழக்க நேரிடும். ஆகவே முட்டையை நீரில் அவித்து சாப்பிடுவதே நல்லது அல்லது ஆம்லெட்டாக காய்கறிகள் போட்டு சாப்பிடலாம்.