Ads Area

நீண்ட கால நகை திருட்டுடன் தொடர்புடையவர் கல்முனையில் கைது: 19.45 பவுண் உருக்கிய நிலையில் மீட்பு.

பாறுக் ஷிஹான்

அம்பாறை மாவட்டத்தில் கடந்த சில காலங்களாக இடம்பெற்று வந்த நகை திருட்டு சம்பங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் ஒருவரை கல்முனை குற்றத் தடுப்பு பிரிவு மற்றும் பொலிஸ் அத்தியட்சகரின் கண்காணிப்பின் கீழ் இயங்கும் மாவட்ட புலனாய்வு பிரிவும் இணைந்து கைது செய்துள்ளனர்.

புதன்கிழமை(28) காலை குறித்த சந்தேக நபரிடம் இருந்து மீட்கப்பட்ட 19.45 பவுண் பெறுமதியான நகைகள் உருக்கப்பட்ட நிலையில் சில நகைகடைகளில் இருந்தும் அடகு நிறுவனங்களில் இருந்தும் மீட்கப்பட்டது.

இவ்வாறு நகை திருட்டுடன் கைதான சந்தேக நபர் சம்மாந்துறை பகுதியை சேர்ந்த முகைதீன் பாவா றிசாட் அகமட்(வயது-27)என்பவராவார்.

மீட்கப்பட்ட நகைகள் யாவும் அக்கரைப்பற்று கல்முனை குடி போன்ற இடங்களில் உள்ள வீடுகளில் கூரைகள் பிரிக்கப்பட்டு களவாடப்பட்ட நிலையில் அக்கரைப்பற்று கல்முனை பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடும் செய்யப்பட்டிருந்தது.

இதன் பின்னர் குறித்த திருட்டு தொடர்பாக பொலிஸ் அத்தியட்சகரின் கண்காணிப்பின் கீழ் இயங்கும் மாவட்ட புலனாய்வு பிரிவு கல்முனை குற்றத் தடுப்பு பிரிவு இணைந்து குறித்த திருட்டில் ஈடுபட்டதாக கூறப்படும் சந்தேக நபரை கைது செய்து களவாடப்பட்ட நகைகளை மீட்டுள்ளது.

மேலும் இந்த நடவடிக்கையில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜி.எல்.ஏ சூரிய பண்டார கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.எச் சுஜீத் பிரியந்த உப பொலிஸ் பரிசோதகர் வை.அருணன் மாவட்ட புலனாய்வு பிரிவின் சார்ஜன்ட் ரவூப் மற்றும் ஏ.எல்.எம் நவாஸ் பொலிஸ் கான்ஸ்டபிள் என்.கீர்த்தனன் உள்ளிட்டோர் இணைந்திருந்தனர்.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe