Ads Area

இரு சிறுநீரகங்களும் பழுதடைந்துள்ள ஓட்டமாவடி, மீராவோடை பாறூக் உதவி கோருகிறார்.

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மீராவோடை 4 ம் வட்டாரம் கூட்டுறவு கிளை வீதியைச் சேர்ந்த செய்யது பாறூக் (வயது 47) என்பவர் இரண்டு சிறுநீரகங்களும் பழுதடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இவருக்கு மேற்கொள்ளப்பட்ட வைத்திய அறிக்கையின்படி மூன்று மாத காலத்திற்குள் சிறுநீரகத்தை மாற்ற வேண்டும் என்று வைத்தியர்கள் கூறியுள்ளனர். அவ்வாறு மாற்றாவிடின் உயிர் ஆபத்து நேரிடலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறித்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ள இவருக்கு ஆரம்ப சிகிச்சையாக தற்போது இரத்த சுத்திகரிப்பு நடவடிக்கையான (Diglysis) ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் செலவில் கொழும்பு Western வைத்தியசாலையில் செய்யப்பட்டுள்ளது.

இவருக்கு இரண்டு சிறுநீரகங்களையும் மாற்றக்கூடிய செலவாக முப்பது இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாவும் மேலும் சிறுநீரகம் அன்பளிப்பு செய்பவருக்கு பன்னிரண்டு இலட்சம் ரூபாய்களும் வழங்கப்படவுள்ளது.

குறித்த சத்திர சிகிச்சையினை மேற்கொள்ள மொத்தமாக நாற்பத்து இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய்கள் தேவையாகவுள்ளது.

மிகவும் கஷ்ட நிலையிலுள்ள இவரால் இப் பணத்தொகையினை வைத்திய செலவுக்காக செலுத்த முடியாதுள்ளது. கல்வி கற்கும் நான்கு பிள்ளைகளின் தந்தையான பாறூக் தற்போது எதுவிதமான தொழில்களிலும் ஈடுபடமுடியாமல் கஷ்ட நிலையில் காணப்படுகின்றார்.

எனவே இவரது சிறுநீரகம் மாற்றும் சத்திர சிகிச்சைக்கு தேவையான பணத்தொகையினை பொதுமக்களிடமிருந்து எதிர்பார்க்கின்றார். குறித்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நபருக்கு உதவ விரும்புவோர் பணம் அனுப்ப வேண்டிய வங்கிக் கணக்கு இலக்கம்

ஏ.எல்.எம்.யூ.எஸ்.சபீனா (நோயாளியின் மனைவி)
1124 5607 9994
(சம்பத் வங்கி, ஓட்டமாவடி கிளை)
தொடர்புகளுக்கு - 0779962008
தகவல்:மகன் #சாஜீத்




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe