களுத்துறை, வஸ்கடுவ பிரதேசத்தில் அண்மையில் கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்தும் கொழும்பில் இருந்து காலி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் 6 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 56 பேர் காயமடைந்திருந்தனர்.
அரச பேருந்தானது மற்றுமொரு வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்டபோது, எதிர்த்திசையில் பயணித்த தனியார் பேருந்துடன் மோதியதினால் இவ் அசாம்பாவிதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
பேருந்து சாரதிகள் போட்டிக்கு ஓடுவது போன்று ஓடி அதனால் ஏற்பட்ட விபத்தில் தனது மனைவியை பறிகொடுத்துவிட்டதாகவும், தாங்கள் வாழ வேண்டிய இளவயதிலே மரணத்தை கொடுத்து தனது குழந்தைகளை நடுத்தெருவில் நிறுத்தி விட்டார்கள் என்றும் விபத்தில் மரணமடைந்த பெண் ஒருவரின் கணவர் கவலையோடு தெரிவித்துள்ளார்.