Ads Area

சட்டவிரோத மதுபானம் (கசிப்பு) அருந்துவோர் உயிரிழந்தால் ஒன்றும் செய்ய முடியாது.

சட்டவிரோத மதுபானம் (கசிப்பு) அருந்துவோர் உயிரிழந்தால் பரவாயில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கம்பஹா மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் கூறுகையில்,

ஏன் இந்த குப்பையை குடிக்க வேண்டும்? நான் பத்திரிகையில் பார்த்தேன், கம்பஹாவில் சட்டவிரோத மதுபானம் அருந்தி 13 பேர் உயிரிழந்துள்ளார்கள் என்ற செய்தியை.

கசிப்பு அருந்தி இறந்தால் நமக்கு ஒன்றும் செய்ய முடியாது. சட்டவிரோத போதைப் பொருட்கள் நாடு முழுவதிலும் வியாபித்துள்ளன. கசிப்பு அருந்தி உயிரிழக்கும் சம்பவங்கள் இன்று, நேற்று நடக்கும் விடயமில்லை.


போதைப்பொருள் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பது இதன் காரணமாகவே என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe