Ads Area

வெளிவாரிப் பட்டதாரிகளுக்கான தீர்வு மூன்று வாரங்களுக்குள் வழங்கப்படும்: அப்துல்லா மஹ்ரூப்.

வெளிவாரிப் பட்டதாரிகளுக்கான தீர்வு மூன்று வாரங்களுக்குள் வழங்கப்படும் என பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்துள்ளார். அப்துல்லா மஹ்ரூப்பிடம் வெளிவாரிப் பட்டதாரிகளுக்கான தீர்வு தொடர்பில் இன்று காலை வினவிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர்,

பட்டதாரி பயிலுனர் நியமனத்தின் போது வெளி மாவட்டங்களில் நியமிக்கப்பட்டவர்களை அந்தந்த மாவட்டத்தில் நியமிக்கப்பட வேண்டும் என தேசிய கொள்கைகள் பொருளாதார அபிவிருத்தி மற்றும் மீள்குடியேற்றம் புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி, இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் வீ. சிவஞானசோதி கூறியுள்ளார்.

அவரை சந்தித்து பேசிய போது வெளிவாரி பட்டதாரிகளின் பிரச்சினை தொடர்பாகவும் பேசியதாக அப்துல்லா மஹ்ரூப் கூறியுள்ளார்.வெளிவாரிப் பட்டதாரிகளின் விடயத்தில் தான் அதிக கரிசனையுடன் இருப்பதாகவும், அவர்களுக்கான தீர்வை பெற்றுக் கொடுப்பதற்கு பல முன்னெடுப்புக்கள் செய்யப்படுவதாகவும் அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.


மேலும், வெளிவாரிப் பட்டதாரிகளுக்கு வழங்கப்பட்ட நியமனத்தில் 833 பேருக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe