திருகோணமலை பொது பஸ் நிலையத்தில் யாழ்ப்பாணம் செல்வதற்கு பஸ் நிலையத்திற்கு சென்ற பெண் அணிந்திருந்த சேலையால் இன்று மதியம் குறித்த பகுதியில் பதற்ற நிலமை ஏற்பட்டது.
குறித்த பெண் தனது பிள்ளையுடன் வயதான பெண்ணெருவருமாக திருகோணமலை நகரிற்கு ஆலய வழிபாட்டிற்காக வந்தபோதும் அவர் புத்தரின் உருவம் பொறித்த சேலை அணிந்திருந்ததனால் இப்பதற்றநிலைமை ஏற்பட்டது.
இந்நிலையில் பஸ் நிலையத்தில் நின்ற பொலிசாரும் குறித்த இடத்திற்கு விரைந்தனர்.
பின்னர் பிரதான பொலிஸ் நிலயத்திற்கு முன்பாகவுள்ள விகாரையின் பௌத்ததுறவி தலமையிலான பலரும் குறித்த இடத்தில் கூடியதுடன் பெண் மீது மனம் புண்படியாகும் விதமான கருத்துக்களை வெளியிட்டதுடன் திருகோணமலை பிரதான பொலிஸ் நிலையத்திற்கும் அறிவித்தனர்.
அதுமட்டுமின்றி தமது புத்த பெருமானை பொறித்த சேலை அணிந்த பெண்ணிற்கு தகுந்த நடவடிக்கையெடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
இச்சம்பவம் இன்று பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றது. இந்நிலையில் ஸ்தலத்திற்கு விரைந்த பொலிசார் குறித்த பிள்ளை மற்றும் இரு பெண்களையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
குறித்த பெண்கள் பொலிஸ் வண்டியில் அழைத்து செல்லப்பட்டனர். பஸ் நிலயத்தில் இந்நடவடிக்கையை அதிகளவிலான மக்கள் பௌத்த ஆதரவாளர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்ததாக செய்தியாளர் தெரிவித்தார்.
நன்றி - வீரகேசரி.