Ads Area

தனித்து போட்டியிடுவதற்கான இயலுமை எமக்கு உள்ளது; மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம்.

ஐக்கிய தேசியக் கட்சி தனது ஜனாதிபதி வேட்பாளரை பெயரிட்ட பின்னர் கூட்டணியில் இணைவதா இல்லையா என்பது குறித்த தீர்மானம் எடுக்கப்படும் என ஸ்ரீ லங்க முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கிம் தெரிவித்துள்ளார். 

கொழும்பில்  (28) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் அவர் இதனை தெரிவித்தார். 

தேர்தலில் வெற்றிப்பெற வேண்டுமாயின் மக்கள் மத்தியில் செல்வாக்குமிக்க ஒருவர் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்பட வேண்டும் என அவர் கூறினார். 

ஒருவரின் ஆளுமை திறனை மாத்திரம் கருத்திற் கொண்டு தனது கட்சி ஒரு முடிவுக்கு வரும் எனவும் அவர் கூறினார். 

அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு இருந்தால் அதனை ஐ.தே.க புரிந்துக்கொண்டு செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். 

தனித்து போட்டியிடுவதற்கான இயலுமை தனது கட்சிக்கு உள்ளதாகவும் அவர் கூறினார். 

இதேவேளை நேற்று பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோரை சந்தித்த அமைச்சர் ரவி கருணாநாயக்க நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்க உதவுமாறு கேட்டுக்கொண்டாரா? என ரவூப் ஹக்கிமிடம் ஊடகவியலாளர்கள் வினவினர். 

இதற்கு பதிலளித்த அவர், அவ்வாறு இரகசியமான வேலைகளில் ஈடுபடுவது சட்டவிரோதமானது என கூறினார்.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe