Ads Area

13000 காஷ்மீர் இளைஞர்கள் இதுவரை இராணுவத்தாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

13000 காஷ்மீர் இளைஞர்கள் இதுவரை இராணுவத்தாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் – உண்மை கண்டறியும் குழுவின் அறிக்கை.

இந்திய பெண்கள் மற்றும் முஸ்லிம் பெண்கள் மன்றத்தின் தேசிய கூட்டமைப்பு சார்பாக நடத்தப்பட்ட உண்மை கண்டறியும் குழுவின் அறிக்கையில் பெரும் அதிர்ச்சியான தகவல் வெளியாகியிருக்கிறது.

காஷ்மீரில் 4000 பேர் காவலில் வைக்கப்பட்டிருப்பதாக அரசு தரப்பு கூறி வந்த நிலையில், பாதுகாப்பு படையினரால் இதுவரை 13000 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என்கிறது அறிக்கை.

இந்திய பெண்கள் கூட்டமைப்பை சார்ந்த அன்னி ராஜா, காவல்ஜித் கவுர், பங்குரி ஜாஹீர், முஸ்லிம் பெண்கள் அமைப்பிலிருந்து சைதா ஹமீத் மற்றும் பிரகதிஷீல் மகிளா அமைப்பிலிருந்து பூனம் கௌசிக் ஆகியோர் இணைந்து காஷ்மீரில் நிலவி வரும் பிரச்சனையின் உண்மை நிலை அறிய 17 செப்டம்பர் காஷ்மீர் சென்று செப்டம்பர் 21ல் திரும்பினார்கள்.

இவர்கள் கொடுத்துள்ள அறிக்கையின் படி, “காஷ்மீர் முடக்கப்பட்டு 43 நாட்கள் ஆன நிலையில் காஷ்மீர் மக்களின், அதிலும் குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் நிலை எப்படியிருக்கிறது என்றறியவே இதனை தொடங்கினோம்.

காஷ்மீரில் குவிக்கப்பட்டிருக்கும் ராணுவ படைகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும். பிரிவு 370 மற்றும் பிரிவு 35 A மீண்டும் அமலபடுத்தப்பட்டு காஷ்மீரில் உள்ள மக்களை கொண்டே காஷ்மீரின் எதிர்கால முடிவுகள் எடுக்கப்படவேண்டும் என்று வலியுறுத்துகிறது.:”

குழுவில் உள்ள அன்னி ராஜா அவர்கள் கூறும் போது, “ நாங்கள் மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், வீடுகள், சந்தை என காஷ்மீரின் எல்லா இடங்களுக்கும் சென்று கிராமப்புறத்திலிருந்து நகர்பகுதிகள் வரை பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள், குழந்தைகள் என பலதரப்பட்ட மக்களிடம் பேசினோம். 43 நாட்களாக அவர்கள் இரும்பு சிறைக்குள் தங்கள் வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள். இதை எங்கள் கண்களால் பார்க்க முடிந்தது.”

“பாண்டிபோரா கிராமத்தில் இரவு 8 மணிக்கு மேல் விளக்கு வைத்து இளம்பெண் படித்து கொண்டிருந்ததால் வீடு புகுந்து அப்பாவையும், சகோதரனையும் கைது செய்திருக்கிறார்கள். கிராமங்களில் இரவு 8 மணிக்கு மேல் விளக்கு எரிய அனுமதியில்லை. “ என்கிறது அறிக்கை.

அறிக்கையில் பாதுகாப்பு நலன் கருதி சம்பந்தப்பட்டவர்களின் பெயர்களை மாற்றியிருக்கிறோம் என்று கூறுகிறார்கள் குழுவினர்.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe