Ads Area

8 வயது பாடசாலை மாணவியை பாலியல் தொந்தரவு செய்த 55 வயது நபர் - கல்முனையில் சம்பவம்.

கல்முனையில் பாடசாலை மாணவி ஒருவரை அழைத்து பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட நபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க கல்முனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் சந்தேக நபர் இரு நாட்கள் அட்டாளைச்சேனை பகுதியில் தலைமறைவாகி இருந்த வேளை கல்முனை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலைடுத்து கைதானார்.

இதன் போது சம்பவ தினமன்று கல்முனைகுடி  பகுதியை சேர்ந்த  8 வயது மாணவி வீடு திரும்பிய வேளை கல்முனைகுடி கனீபா வீதி பகுதியை சேர்ந்த 55 வயதான் ஏ.கரீம் என்பவர் தனக்கு ஒரு சவர்க்காரம் ஒன்றினை வாங்கி தருமாறு கோரியுள்ளார். இதனை அடுத்து குறித்த மாணவியும் சவர்க்காரம் ஒன்றினை வாங்கி அதனை கொடுப்பதற்காக அவரின் வீட்டிற்கு போது மாணவியை குறித்த நபர் பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார்.

அவ் வேளை அயலவர்கள் அதை கண்ணுற்று அங்கு சென்றபோது மாணவியை கைவிட்டு சந்தேக நபர் தப்பி சென்றுள்ளார். இதயடுத்து குறித்த தலைமறைவான நிலையில் பொலிஸார் இரு நாட்களின் பின்னர் சந்தேக நபரை அயலவர்களின் ஒத்துழைப்புடன் கைது செய்தனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவி அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இதேவேளை மாணவியை பாலியல் துன்புறுத்தல் செய்தவரின் மகள் அங்குள்ள பாடசாலை ஒன்றின் ஆரம்ப கல்வி ஆசிரியையாக கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe