கிண்ணியா காக்கா முனை பிரதேசத்தில் இளம் யுவதி ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ள சம்பவமொன்று நேற்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தம்பலகாமம் புளியடி பகுதியைச் சேர்ந்த 19 வயதான இளம் யுவதி ஒருவரே இவ்வாறு தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளார்.
இவரது சடலம் கிண்ணியா தள வைத்தியசாலையில் கொண்டு சென்று பின் மேலதிக பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் கிண்ணியா பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.