கிளிநொச்சி – முழங்காவில் பகுதியில் அரச வங்கி ஒன்றின் தானியங்கி இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையிட முயற்சித்த 6 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த 6 பேரும் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக முழங்காவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நகரில் உள்ள ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து, முன்னர் பல சந்தர்ப்பங்களில் பணத்தை கொள்ளையடிக்க இந்த குழு முயன்றுள்ளது. இதனை அடுத்து குறிப்பிட்ட வங்கியால் முழங்கவில் பொலிஸில் பல முறைப்பாடுகள் வழங்கப்பட்டது.
அவ்வாறு கிடைக்கப்பெற்ற சி.சி.டி.வி. கமரா காட்சிகளை பயன்படுத்தி பொலிஸார் குறித்த 6 பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களை விசாரணையின் பின்னர் கிளிநொச்சி நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என முழங்காவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.