Ads Area

பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வவுனியாவில்! கண் வைத்தியசாலைக்கு அடிக்கல் நாட்டிவைப்பு.

வவுனியா, பறண்நட்டகல் பகுதியில் கண் வைத்தியசாலை கட்டடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று காலை 9 மணிக்கு இடம்பெற்றது.

லண்டன் புனர்வாழ்வும் புதுவாழ்வும் அமைப்பின் ஸ்தாபகர் வேலாயுதம் சர்வேஸ்வரனின் தலைமையில் 150 மில்லியன் ரூபாய் நிதியில் அமைக்கப்படவுள்ள குறித்த வைத்தியசாலைக்கான அடிக்கல்லை இந்தியாவின் பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நாட்டி வைத்தார்.

வன்னி மாவட்டத்தில் உள்ள மூவின மக்களும் உயர்தரமான கண் சிகிச்சையினை மேற்கொள்வதற்கு வசதியாக குறித்த வைத்தியசாலையை வவுனியாவில் உருவாக்கவுள்ளதாக அதன் நிறுவுனர் சர்வேஸ்வரன் தெரிவித்தார்.

இந்த வைத்தியசாலை கட்டடம் அமைக்கப்பட்ட பின்னர் 50 வீதம் இலவசமாக உயர்தர கண் சிகிச்சைகள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வில் மாவட்ட அரச அதிபர் எம்.கனீபா,பிரதேசசெயலர் கா.உதயராஜா, முன்னாள் மாகாண அமைச்சர் ப.சத்தியலிங்கம், பிரதி பொலிஸ்மா அதிபர் அபேயரட்ண, உபநகரபிதா சு.குமாரசாமி, கிராமமக்கள், பொது அமைப்பினர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.







Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe