கோமியம் (மாட்டு சிறுநீர்) விரைவில் மருத்துவ பொருளாக அறிவிக்கப்படும்.
கோமியம் விரைவில் மருத்துவ பொருளாக அறிவிக்கப்பட இருப்பதாகவும், அதற்கான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருவதாக மத்திய சுகாதாரதுறை இணை அமைச்சர் அஷ்வினிகுமார் சப்பே தெரிவித்தார்.
கோவை தனியார் மருத்துவமனையில் அதிநவீன புற்றுநோய்க்கான சிகிச்சை கருவிகளையும் திறந்த வைத்த மத்திய சுகாதாரதுறை இணை அமைச்சர் அஷ்வினிகுமார் சப்பே , அங்கு நடைபெற்ற " புற்று நோய்க்கு எதிரான போர்" விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உரையாற்றினார். அப்போது கேன்சர் போன்ற நோய்களுக்கு சர்வதேச அளவிலான சிகிச்சைகள் இந்தியாவில் கிடைக்கின்றது என தெரிவித்தார்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது, இதே போல நாடு முழுவதும் பல்வேறு பகுதிகள் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க திட்டமிட்டுள்ளோம் எனக் கூறிய அவர், சேலம், மதுரை ,தஞ்சாவூர் ஆகிய மூன்று பகுதிகளில் உள்ள மருத்துவக் கல்லூரியின் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்த நிதிகள் வழங்கப்பட்டுள்ளது, அந்த கல்லூரிகளில் மருத்துவ சீட்டை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார். இதனையடுத்து பேசிய மத்திய இணை அமைச்சர், கோமியம், விரைவில் மருத்துவப் பொருளாக அறிவிக்கப்படும் என்றும் அதற்கான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது எனவும் கூறினார்.