Ads Area

ஓவியக் கலையில் அனைவரையும் கவர்ந்து வரும் நிந்தவூர் இளைஞன்.

நிந்தவூர் 04 ஆம் பிரிவு மஸுர், ஹம்சா தம்பதிகளுக்கு 1997.12.29 அன்று இவ்வுலகில் பிறந்த மஷுர் மின்ஹாஜ் ஹுசைன் ஓவியக்கலையில் கொண்டுள்ள ஆர்வத்தின் வெளிப்பாடே இவ்விஷேட தொகுப்பு.

இவர் தனது ஆரம்பக் கல்வியினை நிந்தவூர் கமு/ அல் மதீனா மஹா வித்தியாலயத்திலும் உயர்கல்வியினை நிந்தவூர் கமு/ அல் - அஷ்ரக் தேசியப்பாடசாலையிலும் தொடர்ந்தார்.

பாடசாலைக் காலத்திலிருந்தே ஓவியக்கலை கொஞ்சம் கொஞ்சமாக தன்னை ஒட்டிக்கொள்ள அதில் தன் முழு ஆர்வத்தையும் காட்டி முறையாக கற்றுக்கொண்ட இவர் ஓவியக்கலை தவிர்ந்து நாடகம், நடனம், நாட்டியம், விவாதம் என பல கலைத்துறைக்குள் தன்னை ஈடு படுத்திக் கொண்டார்.

சமூகத்தில் ஏதாவது ஒரு வகையில் சாதிக்க வேண்டும் என்று துடிக்கும் இளைஞர்களுக்கு மத்தியில் சற்று வித்தியாசமாக தன் சாதனைப் பபயத்தை தொடர்ந்த இவர் பாடசாலைக் காலத்தில் மாணவ மன்றம், கலை இலக்கிய நிகழ்வுகள் மற்றும் விடுகை விழாக்களில் பரத நாட்டியத்தில் தனக்கொரு இடத்தையும் பாடசாலை மட்டத்தில் பிடித்துக் கொண்டார்.

உயர்கல்வியை தொடர்ந்த காலத்தில் அல்- அஷ்ரக் தேசியப் பாடசாலை சார்பாக நாடகம், நடனம் என பாடசாலை மட்டம், மாவட்ட மட்டம், மாகன மட்டம், தேசிய மட்டம் வரை தனக்கெனவொரு அடையாளத்தை வளர்த்துக்கொண்டாலும் இவருக்கு அதிகமான ஆர்வம் சித்திரக்கலையிலேதான் காணப்பட்டது.

இவ்விள வயதிலே பல சமூக சேவை அமைப்புக்களிலே அங்கம் வகித்து இளைஞர்கள் தொடர்பிலான தனது காத்திரமான செயற்பாடுகளையும் முன்னெடுத்து வருகின்றார்.

அன்மைக்காலமாக நண்பர்கள், உறவினர்களளின் வீடுகளிலுள்ள சுவர்களில் தன் கைவரிசையை காட்டத்தொடங்கியதில் இருந்து இது வரை அவருக்கான வரவேற்புக்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

சமூக வலைத்தலங்களினூடாக அடிக்கடி இவரின் சுவரோவியங்கள் நம்மை அசத்தியுமிருக்கின்றது என்றால் அது மிகையாகாது. இவர் காத்தான்குடியில் நிர்மானிக்கப்பட்டு வருகின்ற மஸ்ஜிதுல் அக்ஷா வடிவிலான பள்ளிவாசலில் கடந்த இரண்டு மாதங்களாக நிரப்பூச்சு அலங்காரங்களை தனது சக ஓவியக்கலை நண்பர்களுடன் Hand Power குழுவினருடன் இனைந்து மிகவும் துல்லியமாமானதும் நேர்த்தித்யாதுமான வேலைபாடுகளை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இவ்விள வயதிலே ஓவியக்கலையில் சாதிக்கத் துடிக்கும் இவ்விளைஞனை வாழ்த்தி போற்றி இறைவனிடம் பிரார்த்திக்கின்றோம்.


தகவலுக்கு நன்றி - அரசடி TV



























Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe