அனுராதபுரத்தில் மூன்று பாடசாலை மாணவர்களின் நேர்மையான செயற்பாடு குறித்து பொலிஸார் பாராட்டுத் தெரிவித்துள்ளனர். கலொன்பிந்துவெவ பகுதியில் வீதியில் கிடந்த மூன்று பவுண் தங்க கைச்சங்கிலி மாணவர்களுக்கு கிடைத்துள்ளது. இதன் பெறுமதி 150000 ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
11ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் மூவருக்கே இந்த கைச்சங்கிலி கிடைத்துள்ளது. எனினும் அவர்கள் அதனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.