வெளிநாட்டில் 10 மாதங்களாக கொத்தடிமையாக இருந்த தமிழகத்தைச் சேர்ந்த பெண் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த, 36 வயது பெண், கடந்த 10 மாதத்திற்கு முன், ஏஜென்ட் வாயிலாக, குவைத்தில் வீட்டு வேலைக்குச் சென்றார்.
அங்கு, சென்ற அவர் பசி, பேசிய ஊதியம் தராமல், அவரை அடைத்து வைத்து கொடுமைப்படுத்தியுள்ளனர். இந்நிலையில், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வாயிலாக, அவர் மீட்கப்பட்டு, நேற்று பிற்பகல் விமானத்தில், சென்னை வந்தார்.
அவர்கள் சொல்லியபடி செய்யவில்லை என்றால், தனி அறையில் அடைத்து, சூடு போட்டனர். தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் முயற்சியால், குவைத்தில் உள்ள, இந்தியா தூதரகம் வாயிலாக மீட்கப்பட்டு, சென்னை வந்துள்ளேன்.நான், எத்தனையோ ஆசைகளுடன் சென்று, அனைத்தையும் இழந்து, கட்டிய துணியோடு வந்திருக்கிறேன் என்று கண்ணீருடன் கூறினார்.