Ads Area

இலங்கை இராணுவத்தின் பிரிகேடியர் பதவிக்கு தரம் உயர்த்தப்பட்டுள்ள பிரிகேடியர் - அஸ்லம் முதாலிப்.

இலங்கை இராணுவ சேவையில் கடமையாற்றி வரும் கலகெதரயை சேர்ந்த அஸ்லம் முதாலிப் இலங்கை இராணுவத்தின் பிரிகேடியர் பதவிக்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளதோடு கலகெதர வரலாற்றில் முதல் பிரிகேடியர் என்ற பெருமையையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை பொலிஸ் சேவையில் பொலிஸ் பரிசோதகராக கடமையாற்றி ஓய்வு பெற்ற மர்ஹூம் எஸ்.எம் முதாலிப் மற்றும் ஓய்வு பெற்ற ஆசிரியையான சுபியா நோநா தம்பதியினரின் புதல்வரான பிரிகேடியர் அஸ்லம் முதாலிப் அவர்கள் 1968ம் ஆண்டு பிறந்ததோடு தனது பாடசாலை கல்வியினை கண்டி திருத்துவ கல்லூரியில் பெற்றுள்ளார்.

கல்லூரி வாழ்க்கையின் பின் நாட்டை பாதுகாக்கும் உயர் சேவையான இராணுவ துறையை தெரிவு செய்த இவர் இராணுவத்தில் மஹிந்தவுடைய காலத்தில் நம்பிக்கைகுறியவராகவும் பல பதவியுயர்வுகளை பெற்று திறமையான ஒரு அதிகாரியாக விளக்கியும் அதே வேளை கடமையாற்றியுள்ளார்.

விடுதலைப் புலிகள் அமைப்பினருக்கம் இராணுவத்திற்குமிடையிலான பூநகரி யுத்தத்தின் போது முன்னிலையில் போராடிய பிரிகேடியர் அஸ்லம் முத்தாலிப் கடும் காயங்களுடன் அதிஷ்டவசமாக உயிர் தப்பியமை குறிப்பிடத்தக்கது.

பலத்த காயங்களுடன் உயிர் தப்பியும் கூட உயிரை விட நாட்டை நேசித்த அவர் மீண்டும் சேவைக்கு திரும்பி தனது சேவையை தொடர்ந்துள்ளார். அதற்கு கோத்தபாய தமது வாழ்த்துக்களையும் நேரில் தெரிவித்து அதன் திறமையின் காரணமாக கடந்த வாரம் இராணுவத்தின் பிரிகேடியர் தரத்திற்கு தன்னை தரம் உயரத்தி கலகெதர மண்ணுக்கு பெருமை சேரத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவரது சகோதரரான கெப்டன் அக்ரம் முதாலிப் கூட இராணுவத்தில் இணைந்து கடமையாற்றிய நிலையில் 1996ம் ஆண்டு கட்டபரிச்சான் பகுதியில் விடுதலைப்புலிகளின் தாக்குதலுக்கு இலக்காகி வீர மரணமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

பிரிகேடியர் அஸ்லம் முத்தாலிப் மற்றும் கெப்டன் அக்ரம் முத்தாலிப் ஆகியவர்கள் கலகெதர பிரதேச சபை உறுப்பினரான அம்ஜாட் முத்தாலிபின் மூத்த சகோதரர்கள் ஆவர்.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe