Ads Area

சிறுபான்மை மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்தக்கூடிய ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்ய வேண்டும்.

நாட்டின் ஜனநாயகத்தையும், சிறுபான்மை மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்தக்கூடிய ஜனாதிபதி வேட்பாளரை சிறுபான்மை மக்கள் தெரிவு செய்ய வேண்டும். என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் தெரிவித்தார்.

இலங்கை தமிழா ஊடக வலையமைப்பின் கல்விப்பிரிவினால் மாணவர்களுக்கான இலவச செயல் நூல் வழங்கும் நிகழ்வு சம்மாந்துறை அல்மர்ஜான் தேசிய பாடசாலையின் எம்.எஸ். காரியப்பர் மண்டபவத்தில் தமிழா ஊடக வலையமைப்பின் பணிப்பாளர் எம்.எஸ்.ஜெலீஸ் தலைமையில் நேற்றுமுன்தினம்(07) இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றகையிலே – எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மை மக்களின் வாக்குகள் மிகவும் முக்கியத்துவம் மிக்கதாக அமையப் போகின்றது. சிறுபான்மைச் சமூகத்தின் ஆதரவுவின்றி ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் வெற்றிபெற முடியாது.

பெரும்பான்மை மக்களின் வாக்குகளைப் பெற்று ஜனாபதிபதித் தேர்தலில் வெற்றிபெறலாம் என்றும் இனவாத சக்திகள் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.அந்த நிலைமை வந்தால் எங்களின் எதிர்காலம் சூனியமாக மாறிவிடும். அதகால்தான் நாம் நம்பக்கூடிய நாட்டின் தலைவரை அடையாளம் காண வேண்டும். கடந்த தேர்தல்களில் சிறுபான்மையினரது வாக்குகள் ஜனாபதிபதி யார் என்பதனை தீர்மானிப்பதில் பெருமளவு பங்களிப்பு செய்துள்ளது.

எதிர்வருகின்ற ஜனாதிபதித் தேர்தலிலும் சிறுபான்மை மக்களின் ஆதரவின் அவசியம் உணரப்பட்டிருக்கின்றது. சிறுபான்மையினரது வாக்குகளை எப்படியாவது பெற்றுக்கொள்ள வேண்டும். என்பதற்காக தேர்தலில் போட்டியிடுகின்ற கட்சிகள் அதற்கான வியூகங்களை வகுத்துவருகின்றன. 

ஏப்ரல் 21 சம்பவத்திற்கு பிறகு முஸ்லிம் சமூகம் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர். இவ்வாறான நிலையில் ஜனாதிபதித் தேர்தலின் மூலம் நியாயமான தீர்வுகளை பெற்றுக்கொள்வதில் முஸ்லிம்கள் பொறுப்புணர்வோடு செயற்படுவது காலத்தின் அவசியத் தேவையாகவும்.

எனவே, ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் மக்கள் தனித்தனியாக தீர்மானங்களை மேற்கொள்ளாமல் ஒருமித்து தீர்மானம் மேற்கொள்ள வேண்டும்.

இந்நிகழ்வில் சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.எம்.நஜீம், சம்மாந்துறை பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம். ஹனீபா, சம்மாந்துறை பிராந்திய நீர்ப்பாசனப் பொறியியலாளர் எம்.எஸ்.எம்.நவாஸ், அதிபர்கள், ஆசியர்கள், அரசியல் பிரமுகவர்கள் மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe