செய்தி - றிஸ்விகான்.
அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை எனும் திட்டத்தில் நாவிதன் வெளி பிரதேச சபைக்குட்பட்ட அல்/சிறாஜ் பாடசாலையில் அமைக்கப்பட்ட புதிய கட்டடத்தினை நேற்று 09/09/2019 மாணவர்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.
இவ் விழாவுக்கு பிரதம அதிதியாக நாடாளுமன்ற உறுப்பினரும் அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இனைத்தலைவருமான கௌரவ உறுப்பினர் M.I.M.மன்சூர் அவர்கள் கலந்து கொண்டார்.
நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர் நவாஸ் அவர்கள் வலயக் கல்வி உத்தியோகத்தர்கள் அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் என அனைவரும் கலந்து விழாவினை சிறப்பித்தனர்.