Ads Area

சாய்ந்தமருது அல்-ஜலால் பாடசாலை விவகாரம் ஆளுனரின் கவனத்திக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

Muhammadh Ismaeel Sarjoon

சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயத்திற்கு "அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை" திட்டத்தில் வழங்கப்பட்டு இடைநிறுத்தப்பட்ட கட்டிட விடயம் தொடர்பில் சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜூம்மா பள்ளிவாசல் நிருவாகம் மற்றும் சாய்ந்தமருது சுயேற்சை குழு சார்பான கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.

அந்த முயற்சியின் ஒரு கட்டமாக, கிழக்கு மாகாண ஆளுணர் கௌரவ. ஷான் விஜயலால் டி சில்வா அவர்களுக்கு மகஜர் கையளிக்கும் நிகழ்வு இன்று (2019.09.10) திருகோணமலையில் உள்ள ஆளுனர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது, குறித்த மகஜர் பள்ளிவாசல் மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள் சார்பில் வழங்கி வைக்கப்பட ஆளுனர் சார்பில் ஆளுனரின் பிரத்தியேக செயலாளர் தனபால அவர்கள் பெற்றுக் கொண்டு இதற்கான தீர்வை விரைவாக பெற்றுத் தருவதாக கூறினார்.

மகஜரைப் பெற்றுக் கொண்ட செயலாளர், உடனடியாக கிழக்கு மாகாண பிரதம செயலாளரைத் தொடர்புகொண்டு தேவையான பணிப்புரை விடுத்ததுடன், மாகாண கல்விப் பணிப்பாளரை தமது அலுவலகத்திற்கு வரவழைத்து இது தொடர்பில் மேலும் கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பானது, அல்-ஜலால் விவகாரத்தில் சாதகமான முடிவுகள் கிடைக்க வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளதாக ஜும்மா பள்ளிவாசல் மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள் தரப்பில் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe