Ads Area

பாரிய நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக பொய்யான தகவல் கூறி நிதி திரட்டும் கும்பல்.

பொய்யான தகவல்களைக் கூறி நிதி சேகரிப்பு : விழிப்புடன் இருக்குமாறு பள்ளிவாசல் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தல்

பாரிய நோயினால் தாம் பாதிக்கப்பட்டுள்ளதனால் நிதி வழங்கும் படி பலர் பொய்யான ஆவணங்களுடன் நிதி சேகரிப்பில் ஈடுபட்டு வருவதினால் மக்கள் விழிப்புடன் இருந்து கொள்ளும் படி பொதுமக்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓட்டமாவடி, மீராவோடை ஆகிய பகுதிகளில் இவ்வாறு நிதி திரட்டும் வேலைகளில் பலர் இறங்கியுள்ளதாக அப்பிரதேச பள்ளிவாசல் ஒலிபெருக்கி மூலம் பொது மக்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு நிதி கேட்டு வருபவர்கள் தொடர்பில் பொது மக்கள் பள்ளிவாசல் நிறுவாகத்தினர்களிடம் தெரியப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதிகளில் தொடர்ந்தும் இவ்வாறு வெளிப் பிரதேசங்களிலிருந்து எவ்விதமான ஆவணங்களும், ஆதாரங்களுமின்றி பெருந்தொகையான பணத்தொகையினை சேகரித்துச் செல்வதாக அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு சிலர் பொய்யான நிதி சேகரிப்பில் ஈடுபடுவதினால் உண்மையாக பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் சங்கடத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் கவலை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe