Ads Area

வைத்தியசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள Benz ரக அம்பியுலன்ஸ் வண்டிகள் தொடர்பான குற்றச்சாட்டுக்களுக்கான விளக்கம்.

தகவல் - டொக்டர் சியாட் (MBBS)

சமீபத்தில் பல வைத்தியசாலைகளுக்கு வழங்கப்பட்ட Benz மற்றும் Ford ரக Ambulances பாவிக்கப்படாமல் பழைய Ambulance களே பாவிக்கப்படுவதாக விசனம் தெரிவித்து Fb யில் பதிவுகள் காணக்கிடைத்தது.

புதிய Ambulance ஐ Superline Bus போலவும் பழைய Ambulance ஐ CTB Bus போலவும் பலர் நினைத்துக் கொண்டுள்ளனர் ஆனால் உண்மை அதுவல்ல.

அரச வைத்தியசாலைகளில் பாவனையில் உள்ள ஆம்புலன்ஸ்கள் இரு வகைப்படும்.

01. BLS Ambulance (Basic Life Support Ambulances)
02. ALS Ambulance (Advanced Life Support Ambulance)

பழைய Ambulance கள் BLS ரகத்தை சேர்ந்தவை. இதில் Facilities குறைவு.
(உயிர் காக்கும் கருவிகள், ventilator கள் , monitor கள் இருக்காது. இதனால் இதுவரை காலமும் நோயாளி ஒன்றை கொண்டு செல்லும் போது பல அசௌகரியங்கள் அனுபவிக்கப்பட்டது. ETU வில் இருக்கின்ற கருவிகளை ஏற்ற வேண்டும். ஒட்சிசன் வழங்குவதாக இருந்தால் கூட கையால் அழுத்தி அழுத்தி போய்ச் சேரும்வரை செயற்படுத்த வேண்டும் Manual Ambu Ventilation)

ALS ரக Ambulance களில் (Benz, Ford) உயிர் காக்கும் கருவிகள், ventilator கள் , monitor கள் உட்பட நவீன கருவிகள் In built ஆக காணப்படும். ALS Ambulance களானது ICU க்கு இடமாற்றும் நோயாளி, உயிராபத்துள்ள நோயாளிகளை எடுத்துச் செல்வதற்கே Recommond பண்ணப்பட்டுள்ளது.

சாதாரணமாக ஒரு வைத்தியசாலையில் இருந்து இன்னுமொரு வைத்தியசாலைக்கு X-Ray, CT Scan, மேலதிக பரிசோதனைகள், Clinic போன்றவற்றுக்கு எடுத்து செல்லப்படும் நோயாளிகள் BLS Ambulance (பழைய Ambulance) இலேயே கொண்டு செல்லப்படும்.

புதிய ஆம்புலன்ஸ்கள் ஆபத்தான நோயாளிகளை கொண்டு செல்வதற்காக எப்போதும் Waiting இல் இருக்கும். எந்த அம்பியுலன்ஸ் எப்போது பாவிக்க வேண்டும் என்பதை தேவைக்கு ஏற்ப வைத்தியசாலை பொறுப்பதிகாரி (MOIC, MS or Director) தீர்மானிப்பார்.

BLS Ambulance இல்லாதவிடத்து or ALS Ambulance மாத்திரந்தான் கடமையில் இருந்தால் எல்லா வகையான நோயாளிகளுக்கும் பாவிப்பதில் பிரச்சினை இல்லை. VIP patient என்பதற்காக புதிய ஆம்புலன்சை பாவிக்க முடியாது. அது Misuse of Resources & Conflict of Interest என்ற குற்றங்களுக்கு ஆளாகும்.

எனவே, காரணமாகத்தான் புதிய ஆம்புலன்ஸ்கள் வெயிட்டிங்கில் காணப்படுகின்றன. அத்துடன் புதிய ALS Ambulance களின் நவீன கருவிகளை இயக்குவதற்கான பயிற்சிகள் Ambulance Drivers, Nurses, Doctors களுக்கு வழங்கப்பட்டு கொண்டிருக்கிறது.

பழைய BLS Ambulance , மற்றும் புதிய ALS Ambulance களின் Facilities செயற்பாடுகள் மற்றும் பாவனை பற்றிய Guideline ஐ கீழுள்ள Pdf Pages 19 to 26இல் காண்க. . 



ஒரு வைத்திய நிலையத்தில் இருந்து இன்னுமொரு வைத்திய நிலையத்திற்கு
அம்பியூலன்ஸ் ஊடாக நோயாளியை மாற்றுவது பற்றிய Circular:-

Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe