Ads Area

மல்வத்தை புதுநகர் அ.த.க.பாடசாலையில் ஆரம்பக் கல்வி கற்றல் வளநிலைய திறப்பு விழா.

காரைதீவு சகா.

அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை எனும் திட்டத்தில் கீழ் சம்மாந்துறை கல்வி வலைய மல்வத்தை புதுநகர் அ.த.க.பாடசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஆரம்பக் கல்வி கற்றல் வளநிலைய திறப்பு விழா அண்மையில் இடம் பெற்றது.

பாடசாலை அதிபர் நல்லரெத்தினம் சுந்தரநாதன் தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில்   பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு. கோடீஸ்வரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.


இவ் விழாவுக்கு கௌரவ அதிதிகளாக மேற்படி திட்டத்தின் பணிப்பாளர் கே.பத்மநாதன், சம்மாந்துறை வலையக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம் மற்றும் திட்டத்திற்கான கிழக்கு மாகாண பொறியியலாளர் ரி.அருள்ராஜ் ஆகியோரும் கலந்து சிறப்பித்தார்கள்.

ஒரு கோடியே 60 இலட்சம் ரூபா செலவில் இவ் ஆரம்பக் கல்வி கற்றல் வளநிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe