யுத்த இறுதியின் போது கோட்டாபய ராணுவ தளபதியாக இருக்கவில்லை. பாதுகாப்பு செயலாளராக இருந்தார். யுத்தத்தில் கொல்லப்பட்டோர் யார் என்பதை தளபதிகளே முதலில் அறிவர். ஒரு செயலாளருக்கும் தளபதிக்கும் வித்தியாசம் உண்டு. செயலாளர் பதவியை கோட்டா சரியாக செய்தார். தளபதிக்கான செயலை பொன்சேக்காவும் சரியாக செய்தார். அதனால் யுத்தத்தில் யாரும் காணாமல் ஆக்கப்பட்டார்களா என்ற கேள்விக்கு முதலில் பதில் சொல்ல வேண்டியவர் பொன்சேக்கா என்ற கோட்டாவின் கருத்து மிகச்சரியானது.
காரணம் களத்தில் நின்ற பொன்சேக்கா கொடுக்கும் தகவலே கோட்டாவை வந்தடையும் என்பதே யதார்த்தமானது. மஹிந்த தனதுஅரசியல் தலைமைத்துவத்துவத்தின் மூலம் யுத்தத்தை முன்னெடுக்க பொன்சேக்காவுக்கு அனுமதி கொடுத்தார். மஹிந்த பின் வாங்கியிருந்தால் கோட்டாவினாலோ பொன்சேக்காவினாலோ யுத்தத்தை முன்னெடுத்திருக்க முடியாது.
அதனால்த்தான் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த வெற்றி மஹிந்தவுக்குரியது. அதனை நெறிப்படுத்தியது கோட்டா.
இந்த இருவரின் உத்தரவை முன்னெடுத்தவர் பொன்சேக்கா. யுத்தத்தில் சரணடைந்த எவரும் கொல்லப்படவில்லை என ஏற்கனவே பொன்சேக்கா சொல்லியுள்ளார். களத்தில் நின்ற அவரது பேச்சு ஏற்றுக்கொள்ளக்கூடியதாகும். இந்நிலையில் இது பற்றி கோட்டாவிடம் கேள்வி கேட்பது அர்த்தமற்றதாகும்.
Mubarak Abdul Majeed
Muslim ulama party

