ஹட்டன் கல்வி வலையத்திற்குட்பட்ட ஹட்டன் சென் போஸ்கோ கல்லூரியின் சிங்கள மொழியில் தரம் 03ல் கல்வி பயின்று வந்த மாணவன் ஒருவரை கடுமையாக ஆசிரியர் ஒருவர் தாக்கியமை தொடர்பில் ஹட்டன் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த மாணவனின் ஆடையினை அகற்றி சோதனையிட்ட போது மாணவனின் உடம்பு பகுதி, கை மற்றும் கால் பகுதிகளில் காயங்கள் இருப்பதை கண்ட பெற்றோர் 15.10.2019 இரவு ஆசிரியருக்கு எதிராக ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இவ்வாறு ஆர். தர்ஷன் என்ற தரம் 03ல் கல்வி பயிலும் மாணவனே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.



