எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியுள்ள முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவோடு இணைந்து தேர்தர் பிரச்சாங்களில் ஈடுபடவிருந்த தேசிய விடுதலை மக்கள் முன்னணி தற்போது ஹிஸ்புல்லாவுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்வதிலிருந்து முற்று முழுதாக விலகிக் கொள்ளவிருப்பதாக அதன் பொதுச் செயலாளர் பொறியியளாலர் முஸம்மில் மொஹிதீன் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண முன்னாள் ஆளுனரும், ஜனாதிபதி வேட்பாளருமான ஹிஸ்புள்ளாஹ்வின் ஒட்டக சின்னத்திற்கு வாக்களிப்பதில் இருந்தும் தேர்தல் பிரச்சாரங்களில் இருந்தும் தேசிய விடுதலை மக்கள் முன்னணி அதாவது மான் சின்னம் முற்று முழுதாக ஒதுங்கிக்கொள்ள முடிவெடுத்துள்ளது.
மேலதிக விபரம் எதிர்வரும் 20/10/2019 நடைபெற இருக்கும் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் விளக்கப்படும்.
இப்படிக்கு
முஸம்மில் மொஹிதீன்
பொதுச்செயலாளர்
தேசிய விடுதலை மக்கள் முன்னணி.
மேலதிக தொடர்பு 0777197894


